சூரியனின் சகோதரிகள்:


Tyson - Apollo 40th anniversary 2009.jpg
By NASA/Bill Ingalls - https://www.flickr.com/photos/nasahqphoto/3806476522, Public Domain, Link

1921ல் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பெண்களுக்கு அனுமதி கிடையாது.ஆனால்,Edward Charles Pickering என்ற வானியலாளர் மட்டும் தம் ஆராய்ச்சிக்கு கூடத்தில், சில பெண்களை உதவிக்கு வைத்திருந்தார். அவர்கள் computers என்றே அழைக்கப்பட்டனர். முதன்மையாக அவர்களது வேலை, விண்மீன்களின், ஒளிக்கதிர்களிலிருந்து, அவை எந்த கனிமங்களினாலும் ஆனது என்று கணக்கிடும் பணி.அதன்  காரணமாகவே அந்தப் பெயர் அவர்களுக்கு வந்திருந்தது. இளக்காரமாக, Pickeringன் அந்தப்புரம்  என்றும் அந்த ஆராய்ச்சிக் கூடம் ஆழைக்கப்பட்டதுண்டு. ஆனால், அந்தப்பெண்கள் ஆற்றிய பணிகள்  Astro Physics துறையில் பார தூரமான விளைவுகளை உண்டாக்கின. அப்பெண்களின் முக்கியமானவர்கள், Annie jump Cannon,Henrietta Swan Leawitt,Cecilia Paine ஆகியோர்.இன்று இவர்கள்தான், Astro Physics (இணையான  தமிழ்ச் சொல்,வானியற்பியல்? ) எனும் துறையின், அடித்தளம் அமைத்தவர்கள், என்று போற்றப்படுகின்றனர். இவர்களது ஆராய்ச்சி,நமது சூரியனுக்கு இணையான,அதன் சகோதரிகள் என்று கருதப்படக்கூடிய  விண்மீன்கள் குறித்து இருந்ததனால், Sisters of the  Sun என்ற பெயரும் அவர்களுக்கு பொருந்தி வந்தது.இந்த மூவரில் முதல் இருவர் காது கேளாதவர்கள். இவர்களை மிக அழகாக,தனது Cosmos தொடரின் 8ம் பகுதியில், அறிமுகப்படுத்தியிருக்கிறார்,நீல் டிக்ரேஸ்  டைசன். சிவாஜி கமல் போன்றவர்களுக்கு அடுத்தபடியாக எனக்கு இவரை பிடிக்கத்  தொடங்கிவிட்டது.என்ன ஒரு பாடி லாங்குயேஜ் உச்சரிப்புத் திறன்..அவசியம் காண வேண்டிய ஒரு படைப்பு..
By 
வெ. சுரேஷ் 
Source: https://m.facebook.com/story.php?story_fbid=2004522212944459&id=100001601006425

Comments