சடையப்பர் சிவாலயம் வரலாறு.

கயத்தாறை ஆண்ட மன்னர் வெட்டும் பெருமாள் இராஜபிளவை நோயுற்று இறக்கும் தருவாயில் இருந்தார். அரண்மனை வைத்தியர்கள் மருத்துவம் செய்தும் பலனில்லை.முதலமைச்சர் காளிங்கராயர் மன்னரின் துயர்நீக்க ஈசனை வேண்டினார். ஈசன் சடையப்ப முனிவராக சீடர்களுடன் அரண்மனைக்கு வந்து மன்னருக்கு உயிர்ப்பிச்சை அளித்தார், முதலமைச்சர் காளிங்கராயர் மனம் கசிந்துருகி தாங்கள் யாரென 6வண்டி நிற்க சடையப்ப முனிவராக வந்த இறைவன் சிவ பெருமானாக இத்திருத்தலத்தில் காட்சி தந்தருளினார். முதலமைச்சர் காளிங்கராயரின் வழித்தோன்றல்களால் இத்திருக்கோவில் நிர்வகிக்கப்பட்டு சடையப்ப சுவாமிக்கு சிறப்பாக வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சடையப்ப சுவாமி தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் துயர்நீக்கி அருள் பாலிக்கிறார்.

Comments